• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்

February 3, 2021 தண்டோரா குழு

தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டத்திற்கு கோவையில் திரண்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கையான்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிக்கும் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் கோவையில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டம் 2020 ஐ திரும்ப்பெற வலியுறுத்தியும், தனியார் மயமாக்கலை கண்டித்தும், நாடு முழுவதும் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திரண்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் துவங்கும்போதே ஆர்ப்பாட்டத்திற்குள் உள்ளே நுழைந்த காவல்துறையினர் தலைவர்கள் கையில் இருந்த சட்ட நகலை பறித்தனர்.இதனால் இலுதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் தனது முழு பலத்தையும் பயண்படுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கியும் கைது செய்தனர். மேலும் திட்டமிட்டு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு அப்பகுதியில் இலுந்த கடைகளை அடைக்கநிர்பந்தித்து அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஐஎன்டியூசி தலைவர் துளசிதாஸ், ஏஐடியுசி தலைவர் ஆறுமுகம், சி. தங்கவேல், எச்எம்எஸ் தலைவர் ராஜாமணி, சிஐடியூ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, மனோகரன், எல்பிஎப் மணி, வணங்காமுடி, எம்எல்எப் தியாகராஜன், எஸ்டிடியு ரகுபுநிஸ்தார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க