• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் 1 கோடியே 76 இலட்ச ரூபாய் பறிமுதல்

April 8, 2019 தண்டோரா குழு

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 76 இலட்ச ரூபாய் மறாறும் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை சங்கனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ராஜேஸ்வரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர் வரதாராஜபுரம் பகுதியில் உள்ள சேப் கார்டு ரைட்டர் என்ற தனியார் நிறுவனம் ஏ.டி.எம்.ல் பணம் செலுத்த எடுத்து சென்ற வாகனத்தை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத ஒரு கோடியே 76 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டது. அப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதாக அந்நிறுவனத்தினர் கூறியதை அடுத்து, ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே வாகனத்தில் இருந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காவலாளி சச்சின்குமாரிடம் இருந்து உரிமம் இல்லாத ரைபிள் மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யபட்டது.

மேலும் படிக்க