• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் 10 இலட்சத்து 64 ஆயிரம் பறிமுதல்!

March 18, 2019 தண்டோரா குழு

கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காடு – கோவை சாலையில் வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

அப்போது அபிலாஷ் தனது நண்பர் மெர்வின் என்பவருக்கு அளித்து திரும்ப பெற்ற 10 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அவரிடம் இருந்த 64 ஆயிரம் பணத்தோடு கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்ததாக அபிலாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க