• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துவங்கிய சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு !

February 11, 2021 தண்டோரா குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படம் டான். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கல்லூரி பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை கல்லூரியில் நடத்த உள்ளனர்.

மேலும் படிக்க