• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுக மாநகர் கிழக்கு மாவட்ட 22 வது வட்டக்கழகம் சார்பில் தினமும் ஆயிரம் பேருக்கு மதிய உணவு

May 26, 2021 தண்டோரா குழு

ஒண்றிணைவோம் வா எனும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கோவை தி.மு.க. மாநகர் கிழக்கு மாவட்ட 22 வது வட்டக்கழகம் சார்பாக,தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் என ஆயிரம் பேருக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.குறிப்பாக இதனால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு கழக தொண்டர்கள் ஒண்றிணைவோம் வா என ஆதரவற்றோர்களுக்கு உதவ ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.22 வது வட்ட கழகம் சார்பாக சாய்பாபா காலனி,22 வார்டு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் தலைமையில் ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்,சமூக விலகலை கடைபிடித்து, அந்த பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சகல சன்மார்க்க ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து என்.எஸ்.ஆர். சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவோரம் வசிப்போர், ஆதரவற்றோர் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இதில், தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ், எஸ்.என். ரவி, பாஷாபாய், பகவான், பிரவீன், அசோக்,, மாரியப்பன், ராஜேஷ், சபரி , பரணி, ராம், சக்தி, கண்ணன், ஹரி, பேட்டை முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க