• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

March 28, 2019 தண்டோரா குழு

சமூக வளைதளங்களில் சட்டமன்ற துணைசபாநாயகர் , பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பரப்பி வரும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து உள்ளனர்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று தவறுதலாக வேறு ஒரு நபரை குறிப்பிட்டு , பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வளைதளங்களில் பரப்பி வரும் , தருமபுரியை சேர்ந்த திமுக பிரமுகர் தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி , அதிமுகவை சேர்ந்த 52 ஆவது வட்ட கழக துணை செயலாளர் சீனிவாசன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயம் தேட திமுக முயல்வதாக புகார் தெரிவித்தார்.

மேலும் படிக்க