• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தாயை கைது செய்த போலீசாரிடம் அழுது புலம்பிய சிறுமி

June 26, 2019 தண்டோரா குழு

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தாயை கைது செய்த போலீசாரிடம் சிறுமி அழுது புலம்பியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஆங்காங்கே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் போகம் பட்டி பகுதியில் இன்று உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணிக்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது போராட்டக்காரர்கள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரம் ஒன்றில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை கீழே இறக்கி சமரசப்படுத்தினார் அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், தனது தாயை கைது செய்ய வேண்டாம் என்று கூறி சிறுமி கண்ணீர் மல்க போலீசாரிடம் இருகைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரது தாயாரை போலீசார் கைது செய்யவில்லை மேலும் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம் வெளியே செல்லுங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறி சிறுமியின் கண்ணீர் மல்க அதிகாரிகளை கேட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க