• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செயற்கை கோளுக்கான தரைதள கண்காணிப்பு நிலையம் திறப்பு !

January 28, 2021 தண்டோரா குழு

விண்வெளியில் நடைபெறும் அனைத்து விதமான, சம்பவங்களையும், இணையம் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில், மாணவர்கள் கண்டுபிடித்த செயற்கை கோளுக்கான தரைதள கண்காணிப்பு நிலையம் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று திறக்கப்பட்டது.

அதனை இஸ்ரோ தலைவர் சிவன் இனையதள வாயிலாக திறந்து வைத்த பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சென்னை, கோவை, நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைதளம் நிலையம் துவக்க விழாவில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மாணவர்களின் இந்த முயற்சி என்பது விண்வெளி சார்ந்த செயல்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் பெறும் முயற்சியாகும்.இதில் பங்களிப்பை அளித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.செயற்கைக்கோள் தயாரிப்பு, தரைதள நிலையம் என்பது நாட்டில் பெரும்பாலானவர்களின் கனவு.

உள்நாட்டிலேயே செயற்கைக்கோள் தயாரிப்பு என்பது விலை குறைவு என்று என்பதுடன், வணிக ரீதியான பயனை அளிக்கும்.தொடர்ந்து, இது சம்மந்தமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி அளிக்கிறேன். நாட்டின் 130 கோடி மக்களுக்குமானது இஸ்ரோ என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் தங்கவேல் கடந்த 2010 ஆண்டு முதலாக தங்களின் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கனவாக, கல்லூரியின் சார்பில், புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்பது பற்றிய ஆராய்ச்சி, பலகட்ட முயற்ச்சியின் விளைவாக, கல்லூரி ஆசிரியர்களின் கடின உழைப்பால், வருகிற பிப்ரவரி 22 ம்தேதி கல்லூரியின் சார்பில் கண்டுபிடிக்கபட்ட புதிய வகையிலான, செயற்கைக்கோளான *”சக்தி சாட் PSLV / C – 51″* என்ற செயற்க்கை கோள் விண்ணில் செலுத்த உள்ளதாகவும், இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் பிப்ரவரி 22 ம்தேதி விண்ணில் செலுத்த உள்ளதாகவும், அதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் உதவியுடன், ஸ்ரீஹரிகோட்டா என்ற பகுதியில் இனையவழியில் இருந்து செலுத்த உள்ளதாகவும், இந்த செயற்கை கோளானது, விண்வெளியில், நடக்கின்ற அனைத்து விதமான இணையம் சார்ந்த விஷயங்களின் செயல்பாடுகளை இங்கு தெரிவிக்கும் திறன் கொண்டது எனவும், தெரிவித்தார்.

மேலும் படிக்க