• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுநீர் கழிக்க சென்றவர் குளத்தில் விழுந்து உயிரிழப்பு !

November 27, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையின் எதிர்ப்புறம் இருக்கும் பைபாஸ் சாலையில் உள்ள குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த நாகராஜ்(35). இவர் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மணிகண்டன் என்பவரும் பணி செய்து வருகிறார்.இதில் மணிகண்டனின் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாகராஜ் இவர்களைப்பார்க்க வந்துள்ளார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன் மற்றும் நாகராஜ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பிறகு அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளனர். அப்போது நாகராஜ் திடீரென நிலைதடுமாறி குளத்தில் விழுந்தார்.இதில் அவருக்கு நீச்சல் தெரியாததாலும் மதுபோதையில் இருந்ததாலும் குளத்தில் விழுந்த உடன் நீரை குடித்து விட்டார். பின்னர் உடனிருந்த மணிகண்டன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்துவந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் குளத்தில் விழுந்த நாகராஜனை மீட்டனர். ஆனால் நாகராஜ் அதிக நீரை குடித்து விட்டதால் குளத்திலேயே இறந்துவிட்டார். சிறுநீர் கழிக்க சென்றவர் குளத்தில் விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க