January 6, 2026
தண்டோரா குழு
சாலிடாரிட்டி தமிழ்நாடு தலைவர் முஹம்மது ரியாஸ் மாநிலச் செயலாளர்கள் ஜாபர் சாதிக், ஹபீப் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் – மெளலவி முஹம்மது நாசர் புஹாரி, சகோ. சபீர் அகமது, சாலிடாரிட்டி கோவை மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோர் இணைந்து இளைஞர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதன் விவரம் வருமாறு:-
இந்த அறிக்கை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களோடு கலந்துரையாடியும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநலம், மனித உரிமைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள வல்லுநர்களுடன் ஆலோசித்தும் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மேம்பாடு மற்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான கோரிக்கைகளை உள்ளடக்கிய இத்தேர்தல் அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வழங்கி, இக்கோரிக்கைகளை அவர்களது தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளாக இணைக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் சாலிடாரிட்டி வலியுறுத்தும்”
மேற்கண்டவாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.