• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடங்கள் தேர்வு !

January 19, 2021 தண்டோரா குழு

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை வஉசி பூங்கா பகுதியில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு மைதானம் ஓடு தளத்துடன் பயிற்சியாளர்கள் ஓய்விடம், பார்வையாளர் அரங்கு, கழிவறைகள், குடிநீர் வசதி, மின் விளக்குகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மாநகராட்சி சார்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து குழந்தைகள் சறுக்கு விளையாட்டில் மாநில அளவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள். இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர் கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க