• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சரியான விலையில் தரமான வீடு கட்டித் தர பெர்ஃபெக்ட் நிறுவனம் சார்பில் அறிமுகம்

February 3, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூரைச் சேர்ந்த பெர்ஃபெக்ட் இன்ஃப்ரா டெக் தனது சமீபத்திய தயாரிப்பான ‘மலிவு மற்றும் நிலையான ஷீயர் வால் ஹவுஸ்’களை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் பில்ட் இன்டெக் 2023 எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது.

பெர்ஃபெக்ட் இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயராகவன், கொடிசியாவின் ஹால் B க்கு வெளியே கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கு தனது தயாரிப்பின் செயல் விளக்கத்தை கொடுத்தார்.

ஷியர் வோல் ஹவுஸ் என்பது நிறுவனத்தின் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தில் , மலிவு விலையில் தரமான வீடு தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் எளிதான ஒரு அமைப்பின் மூலம் கட்டுமானத்திற்கு குறைந்த நாட்களில் கட்டித்தரப்படுகிறது. கட்டுமானப் பணியில் எந்த செங்கற்களும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒற்றைக்கல் உலோக சட்டமும் வலுவான கான்கிரீட்டும் வீட்டின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மற்ற வழக்கமான வீடுகளை போலவே இந்த வீடுகளும் அனைத்து வெப்பநிலையை தாங்கும் என்றும் நில அதிர்வு களை தாங்கவும்,கட்டிடத்தில் விரிசல் ஏற்படாமல் கட்டிடத்தை பாதுகாக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு எந்தவொரு பராமரிப்பையும் செய்ய வேண்டியதில்லை.

தரைக்கு விட்ரிஃபைட் டைல்ஸ் , வயரிங் மற்றும் பிளம்பிங் வசதிகள் தேவைக்கு ஏற்றாற்போல செய்து தரப்படுகிறது. இவை அனைத்தும் முடிக்கப்பட்டு, வழக்கமான கட்டுமான முறைகளில் 1/3-ல் ஒரு பங்கு நேரத்தில் வீடு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், குடோன்கள் கூட இந்த முறையில் கட்டலாம்.

பெர்ஃபெக்ட் இன்ஃப்ரா டெக் இந்த கட்டுமான முறையைப் பற்றி 8 ஆண்டுகளாக விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஒட்டுமொத்த கட்டுமான செயல்முறையை மேம்படுத்தியிருப்பதாகவும் விஜயராகவன் கூறினார்.

ஏறக்குறைய 70% இந்திய குடும்பங்கள் தங்களுக்கென சொந்த வீடு இல்லாதவர்களோவோ அல்லது சரியான வீடுகள் இல்லாதவர்களாகவோ உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமங்களில் இருப்பதால், இந்தத் திட்டம் குடிசைகளை கட்டிடங்களாக மாற்றும்.

பெர்ஃபெக்ட் இன்ஃப்ராடெக்ஸ் ஷீயர் ஹவுஸில் பயன்படுத்தப்படும் அனைத்து கட்டுமானப் பொருட்களும் உயர் தரத்தில் இருக்கும் என்றும் , இந்த வகை கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தங்கள் நிறுவனம் தயாரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

400 சதுர அடி நிலத்தில் ஷீயர் வால் ஹவுஸ் 15 நாட்களில் கட்டி முடிக்கப்படும். விலையைப் பொறுத்தவரை, 1 BHK வீட்டை வெறும் ரூ. 8 லட்சத்திலும், 750 சதுர அடி நிலத்தில் 2 BHK வீடு ரூ. 12 லட்சம் மற்றும் 980 சதுர அடி நிலத்தில் 3 BHK வீடு ரூ. 16 லட்சத்திலும் கட்டி தரப்படுகிறது. எங்கள் நிறுவனம் 3 லட்சத்தில் , 230 சதுர அடியில் PMAY வீடுகளுக்கும், 350 சதுர அடியில் 5 லட்சத்துக்கு ஸ்டுடியோ வீடுகளுக்கும் தீர்வுகளை வழங்குகிறது.

5 லட்சத்திற்கும் குறைவான செலவில் விவசாயிகளுக்கு மிகவும் மலிவு விலையில் குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்கியுள்ளது. விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். என்றார்.

மேலும் படிக்க