• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சரியான சில்லறை தராத பயணிக்கு அடி உதை

May 24, 2022 தண்டோரா குழு

அன்னூர் அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க சரியான சில்லறை கொடுக்காத பயணியை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கசாமி, வேலை நிமித்தமாக அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக என்.எம்.எஸ் எஸ்‌.ஆர்‌.டி என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமி நடத்துனரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் கடிந்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், நடத்துனர் உடன் இணைந்து ரங்கசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.அப்போது கீழே இறங்கிய ரங்கசாமியை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதனால் ரங்கசாமிக்கு கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனை வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவது,பாதுகாப்பின்றி படியில் தொங்கி கொண்டு செல்லும் அளவுக்கு,கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தனியார் பேருந்து ஊழியர்கள் சில்லரைகாக பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் பேருந்து பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க