• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சம்பளம் கேட்டவற்கு பீர் பாட்டிலால் அடி – உரிமையாளர் கைது !

May 23, 2020 தண்டோரா குழு

கோவையில் சம்பள பணம் கேட்டவரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் மற்றும் நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் வசித்து வருபவர் சசி கிருஷ்ணன்.இவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (43) என்பவரது நகை கடையில் மூன்று நாள் பணியாற்றி உள்ளார். இதற்கான சம்பள பணத்தை ஹரிகிருஷ்ணன் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சசி கிருஷ்ணன் வீட்டிற்கு அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பரான அப்துல் சலாம்(21) ஆகியோர் சென்றுள்ளனர். வேலைக்கு வரும்படி அப்துல் ஹக்கீம் கூறியுள்ளார்.தனது சம்பள பணத்தை தருமாறு கேட்டதால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி உள்ளார்.உடன் இருந்த அப்துல் சலாம் பீர் பாட்டில் கொண்டு தாக்கி அவரை மிரட்டி உள்ளார்.

இது குறித்து சசிகிருஷ்ணன் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க