• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடைகளுக்கு சீல் !

July 20, 2020 தண்டோரா குழு

கோவையில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாநகரப்பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உத்தரவின் படி பறக்கும் படை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த இரு செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனையடுத்து மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் அக்கடைகளை மூடி சீல் வைத்தனர்.மாநகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் கடைகளை மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் மற்ற செல்போன் கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க