• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோடக் லைஃப் நிறுவனம் சார்பில் நடமாடும் வேன் மூலம் சுகாதார மருத்துவ சேவை துவக்கம்

August 19, 2025 தண்டோரா குழு

கோடக் லைஃப் நிறுவனம் சமூக சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் புதிய நடமாடும் மருத்துவ வேன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் மொத்த வேன்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கான துவக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவான்டா ஒட்டலில் நடைபெற்றது.

விழாவில் கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஷ் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நடமாடும் வேன் மருத்துவ சேவையை கொடியசைத்து
தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:-

இந்த நடமாடும் மருத்துவ வேன்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து ஆரம்ப மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க உள்ளது அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோடக் லைஃப் வோக்கார்ட் அறக்கட்டளையுடன் இணைந்து,கோவையில் இரண்டு நடமாடும் மருத்துவ வேன்களையும்.ராமநாதபுரம், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு வேன்களையும் நிறுத்த உள்ளது.

இந்த வேன்கள் தொலைதூர மற்றும் சிறு நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீட்டு வாசலுக்கே சென்று இலவச ஆரம்ப சுகாதார பரிசோதனைகள், நோயறிதல் சேவைகள் மற்றும் அடிப்படை சுகாதார சிகிச்சைகளை வழங்க உள்ளன.இதற்கான செயல்பாட்டு செலவுகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அனைத்தையும் கோடக் லைஃப் வழங்குகிறது. அத்துடன் இதில் பணியாற்றும் குழுவினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் வழங்குகிறது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க