• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா தொற்றால் சுகாதாரத் துறை ஆய்வாளர் உயிரிழப்பு !

August 16, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை, அரிசிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குமார் வயது 56. இவருக்கு கடந்த 13 ஆம் தேதி கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு தீவிர சுவாசக் கோளாறும் சர்க்கரை நோயும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென சுவாசக் கோளாறால் அவதிபட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு நஞ்சுண்டாபுரம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க