• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கூரியர் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப்பொடி தூவி 8 கிலோ தங்கம் கொள்ளை

February 7, 2019 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் கூரியர் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப்பொடி தூவி 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பிரதீப் சிங்(26). இவர் இன்று கோவை விமான நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் பிரதீப் சிங் மீது மிளகாய்ப்பொடி தூவி வழிமறித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதையடுத்து, அவர் இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக பிரதீப் சிங் கூறினார். தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் இருந்து ஒரு கத்தி மற்றும் காலனிகளை கைப்பற்றி
விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதைபோல் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க