• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில்  குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து   தற்கொலை

December 12, 2018

குடும்ப பிரச்சனை காரணமாக நிறைமாத கர்ப்பிணி பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து கொலை செய்துள்ள பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கருப்பராயன் பாளையத்தைச்சேர்ந்தவர் செல்வராஜ்  இவரது மகள் மகேஷ்வரி (27) கட்டிட வேலை செய்து வருகிறார்.

சின்னத்தடாகத்தைச்சேர்ந்த தனபால்(32)  என்பவருக்கும் மகேஷ்வரிக்கும்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு யுவன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் மகேஷ்வரி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மகேஷ்வரி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து இன்று மதியம் 2.30 மணியளவில் , ரத்தினபுரி தயிர் இட்டேரி புதுப்பாலம் அருகே மகேஷ்வரி தனது தந்தை  செல்வராஜ் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில்வே பாதை அருகே வந்துள்ளார். அப்போது திடீரென வந்த ரயில் முன் தனது குழந்தையுடன் பாய்ந்து மகேஸ்வரி   தற்கொலை செய்துகொண்டார்.

மகேஷ்வரி மற்றும் யுவன் உடல் இரண்டாக வெட்டப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவர் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை ரயில் மோதி வெளியே வந்து இறந்துள்ளது. இறந்த போனதும் ஆண் பச்சிளம் குழந்தை எனத்தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க