• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டு யானை தூக்கி வீசியதில் படுகாயமடைந்த முதியவர் பலி

March 7, 2019 தண்டோரா குழு

கோவை மதுக்கரை வனச்சரகம் , நவக்கரை பிரிவு, எட்டிமடை, பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை மிலிட்டரி காலணி அருகே காட்டு யானை ஒன்று குட்டியுடன் பிரகாஷ் என்பவரது தோட்டத்தில் முகாமிட்டது, இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று இரவு முழுவதும் யானையை போலாம்பட்டி காப்புகாட்டுக்குள் விரட்டியடித்தனர், அதன் பின் மீண்டும் இரவு 2.30 மணியளவில் மதுக்கரை அருகே உள்ள காந்திநகர் பகுதிக்குள் மீண்டும் குட்டியுடன் புகுந்த காட்டு யானை அதே பகுதியில் உலாவி வந்தது.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர், அப்போது வேலுச்சாமி (70) என்பவரது வீட்டின் அருகே இருந்த யானை வெளியே தூங்கி கொண்டிருந்த வேலுச்சாமி யை தூக்கி வீசியது, இதில் படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடித்தனர், பின் மதுக்கரை போலிசாருக்கு தகவல் அளித்த வனத்துறையினர், வேலுச்சாமி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க