• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கவசா எனும் – தடுப்பூசி மையம் துவக்கம்

August 11, 2020 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள மை கிளினிக்-ல் பி.எஸ்.ஜி மருத்துவமனை “கவசா எனும் – தடுப்பூசி மையத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

கொரோனாவினால் மக்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றன. இதனை பி எஸ் ஜி மருத்துவனை அறிந்து மக்களுக்கு ஏற்றவாறு வீட்டிற்கே சென்று இரத்த மாதிரிகளை சேகரிக்கும் “மித்ரா” எனும் திட்டத்தையும், நாடு முழுவதும் மருந்து மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் “சஞ்சீவனி” திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இந்த திட்டமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டங்களை தொடர்ந்து, தற்போது “கவசா” எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து வயதினருக்குமான தடுப்பூசி மையத்தை கோவை அவிநாசி சாலை , பீளமேடு பகுதியில் உள்ள “பி எஸ் ஜி, மை கிளினிக்-ல்” இந்த தடுப்பூசி மையத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த கவசா திட்டமானது பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள அனைவரும் அந்தந்த வயதிற்கு, அந்தந்த கால கட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை இட்டு நலமுடன் வாழ உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும்.

இது குறித்து பி எஸ் ஜி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன் கூறுகையில்,

உலகில் பெருகிவரும் நோய்களுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளே பல பெரிய வியாதிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த “கவசா” தடுப்பூசி மையத்திற்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சென்று தனக்கு தேவையான தடுப்பூசிகள் பற்றி மருத்துவரிடம் கேட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வகையான தடுப்பூசிகளும் இந்த “கவசா” மையத்தில் போடப்படும். இந்த தடுப்பூசி மையமானது. நோய் வரும் முன் காப்பதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த “கவசா” தடுப்பூசி மையம் பல்வேறு நோய்களிடமிருந்தும் பாதுகாக்கும் கவசமாக விளங்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விபரங்களை தெரிந்து கொள்ள 82200 99352 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க