• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கன மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

June 13, 2018 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக செல்வபுரம் பகுதிகளில் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. மேலும் அதன் கிளைகளான ராஜ வாய்க்கால்களிலும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டுச்செல்வதால் ஆங்காங்கே சில இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதில் செல்வபுரம் சரோஜினி நகரில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது.ராஜ வாய்க்காளில் வரும் தண்ணீர் மூலம் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜ வாய்க்காலை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும், உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க