• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய விவகாரம் – 11 மீது வழக்குப்பதிவு

April 10, 2019 தண்டோரா குழு

கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன், ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆத்துப்பாலத்தில் நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடினர். பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கண்டெய்னரில் டீத்தூள் மட்டுமே மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.

இந்த நடவடிக்கையின் காரணமாக, சம்பந்தப்பட்ட தேயிலை நிர்வாகத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் முகமது சாஜீத் தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் ஓட்டுநர் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் முகமது சாஜீத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டெய்னர் லாரியை சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர் முகமது சாஜித் மற்றும் ஃபிரோஸ்கான் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சி.ஐ.டி.யு. மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க