May 14, 2026
தண்டோரா குழு
டிபிஎஸ் வங்கி இந்தியா , டெலாய்ட் டச் டோமாட்சு இந்தியா எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து, ‘பெண்கள் மற்றும் நிதி’ஆய்வு வரிசையின் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
‘பணம் சார்ந்த விஷயங்கள்: பெண்களின் மனநிலை, நிதி முகமை மற்றும் வாழ்க்கை மற்றும் தொழில் நிலைகளில் இருக்கும் பழக்கவழக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தெற்கு (36%), வடக்கு (23%), கிழக்கு (14%) மற்றும் மேற்கு (27%) என்ற விகித அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த 1,342 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண் தொழில்முனைவோர், அதிக நிகர மதிப்புள்ள பொருளாதார வசதி படைத்த பெண்கள் மற்றும் வருவாய் ஈட்டும் கிராமப்புற பெண்களின் நிதி மேலாண்மை குறித்த சுவாரஸ்யமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது,நிதி முடிவெடுப்பதில் அவர்களுக்கு உள்ள சுய அதிகாரம் , நிதிச் செயல்பாடுகளுக்கான முக்கிய உந்துசக்திகள் மற்றும் வாழ்க்கை இலக்குகள் ஆகியவற்றை ஆராய்கிறது.அத்துடன், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் நிதிச் செயலிகளுடன் இணைந்திருப்பதில் அவர்களுக்குள்ள விருப்பங்கள், தொழில் இடைவெளிகள் குறித்த அவர்களின் பார்வைகள், வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த புரிதல், ஓய்வூதியத் திட்டமிடல் மற்றும் நீண்ட கால நிதித் தயார்நிலை ஆகிய அம்சங்களையும் இந்த ஆய்வு விரிவாக அலசுகிறது.
ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெண்கள் நிதி முடிவுகளைத் தாங்களே எடுக்கும் போக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன:பெண் தொழில்முனைவோர்: 69% பேர் நிதி விஷயங்களில் தாங்களே முதன்மை முடிவெடுப்பவர்களாக உணர்ந்திருக்கிறார்கள்.
கிராமப்புற வருமானம் ஈட்டும் பெண்கள்: 60% பெண்கள் தாங்களாகவே நிதி முடிவுகளை எடுக்கின்றனர்.பொருளாதர வசதிப்படைத்த பெண்கள்: 58% பேர் சுதந்திரமாக முடிவெடுக்கின்றனர். தென்னிந்தியாவில், பொருளாதர வசதிப்படைத்த பெண்களை விட பெண் தொழில்முனைவோரே அதிக அளவில் சுதந்திரமாக நிதி முடிவுகளை எடுக்கின்றனர்.
கோவையில் கணக்கெடுக்கப்பட்ட பெண் தொழில்முனைவோரில் 65% பேரும், பொருளாதர வசதி படைத்த பெண்களில் 50% பேரும் நிதி முடிவுகளை சுதந்திரமாக எடுக்கின்றனர்.இந்த ஆய்வின் மூலம், நவீன இந்தியப் பெண்கள், குறிப்பாக கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ளவர்கள், தங்களது நிதி எதிர்காலத்தைத் திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலும் அதிக அதிகாரத்துடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இந்தப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பெண்களுமே வங்கியின் உலகளாவிய செயல்பாடு தங்களது முடிவில் செல்வாக்கு செலுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.இதில் பெரும்பான்மையானோர் (60%), இது தங்களது தேர்வில் ‘மிக வலுவான’ செல்வாக்கைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
டிபிஎஸ் வங்கி இந்தியாவின் கார்ப்பரேட் பேங்கிங், நிதி நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான க்ளோபல் டிரான்ஸ்சாக்ஷன் சர்வீசஸ் பிரிவின் நிர்வாக இயக்குநரும், இந்தியப் பிரிவின் தலைவருமான திவ்யேஷ் தலால் இது குறித்துக் கூறுகையில்,
“எங்களது ‘பெண்கள் மற்றும் நிதி’ ஆய்வின் சமீபத்திய அறிக்கையிலிருந்து கிடைத்துள்ள நுண்ணறிவுகள், பெண் தொழில்முனைவோர் ஒரு வங்கித் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் உலகளாவிய செயல்பாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவ அதிகரித்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது, தங்களது எல்லை தாண்டிய வணிகக் கனவுகளுக்கு ஆதரவளிக்கவும், சர்வதேச சந்தைகளுக்கான வாய்ப்புகளை வழங்கவும் மற்றும் விரிவான வணிகச் சூழல்களுடன் தங்களை இணைக்கவும் கூடிய நம்பகமான கூட்டாளர்களை அவர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது.