• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கட்டைப்பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு

April 6, 2022 தண்டோரா குழு

கோவையில் கட்டைப்பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில்,ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிறந்து சில தினங்களே ஆன குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து,பீளமேடு காவல்துறையினரும்,சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை பையில் வைத்து விட்டுச் சென்றவர்கள் யார்..? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை,கட்டைப்பையில் வைக்கப்பட்டு கோவிலில் விட்டுச் சென்ற சம்பவத்தால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க