• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி

September 26, 2020 தண்டோரா குழு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் அவருக்கு இன்று இசை அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், கோவையை சேர்ந்த மாநில அளவிலான இசைக் கலைஞர்கள் சார்பில் அலெக்ஸ், சிம்பொனி ராஜ், ஆனந்த் தலைமையில் இசைக்குழுவினர் ரகு,தங்கவேல், ராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பிரபல பாடல்களை இசைக்குழுவினர் பாடி அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக பாலசுப்பிரமணியத்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க