• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

August 7, 2020

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி நிர்பார் நிதி
(சுயசார்பு) திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கியின் மூலம் கடன் பெறலாம் என அறிவித்திருந்தது. எனவே, வங்கிக்கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசி எண், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்கள் ஆகிய
ஆவணங்களுடன் கீழ்ழ்கண்ட மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.

Screenshot_2020-08-07-13-52-22-383_com.google.android.apps.docs

மேலும் படிக்க