• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு

October 16, 2020 தண்டோரா குழு

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்துகள் சேவை இன்று துவங்கியுள்ள நிலையில், கோவையில் உள்ள ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை சக்தி சாலையில் 100 அடி ரோடு அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.சுமார் 350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள்,கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி,நகர்கோவில், தென்காசி, பெங்களூர், ராஜபாளையம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அன்று முதல் ஆம்னி பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், சுமார் 6 மாதங்கள் கழித்து தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளின் சேவை துவங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மத்திய,மாநில அரசுகளின் வழிக்காட்டுதல் படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேருந்தை இயக்கும் முன் கிரிமிநாசினி தெளித்தல், ஓட்டுனர், பயணிகள் ஆகியோருக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க