• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

October 28, 2021 தண்டோரா குழு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற துவங்கியுள்ளது.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கம் ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கட்டத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி, மற்றும் ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பேசிய பழனிக்குமார்,

ஒரு வார காலமாக தேர்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும் தேர்தலுக்காக பல காரியங்கள் செய்ய வேண்டிய உள்ளதாகவும் தெரிவித்தார். 50 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாக தெரிவித்த அவர் அந்த மக்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதாக கூறினார். மின்னணு எந்திரங்களைக் கொண்டு இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் சட்ட விதிகளைத் தெரிந்து கொண்டு தேர்தல் நடத்துவது மிக எளிதாக இருக்கும் என்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உட்பட மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க