• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி

October 31, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி, தலையில் கரகம் ஏந்திய படி தொடர்ந்து ஒரு மணி நேரம் மூன்று பாட்டில்கள் மீது கைகளில் தீச்சட்டியும் ஏந்தி நின்று உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.பெண்களால் எல்லாதுறையிலும் சாதிக்க முடியும் என கண்களில் கண்ணீர் வழிய தமது சாதனையை நிறைவு செய்தார்.

கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ்துறையில் இளங்கலை பயின்று வரும் மாணவி ஐஸ்வர்யா.சின்னியம்பாளையம் குளத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, கவிதா ஆகியோரின் ஒரே மகளான இவர்,சிறிய வயதில் இருந்தே நாட்டுப்புற கலைகள் மீதுள்ள ஆர்வத்தால் காந்திமாநகரில் உள்ள கிராமிய கலை கூடத்தில் கடந்த ஒரு வருடமாக கிராமிய கலைகளை கற்று வருகிறார்.

இந்நிலையில் இவருடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சக மாணவ, மாணவிகளின் சாதனை முயற்சியால் ஈர்க்ப்பட்ட இவர்,தாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் முயற்சியில், மாணவி ஐஸ்வர்யா பொன்னுசாமி, தலையில் கரகம் ஏந்தி படி தொடர்ந்து ஒரு மணி நேரம் மூன்று பாட்டில்கள் மீது கைகளில் தீச்சட்டியும் ஏந்தி நின்று உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.கிராமிய கலைகளில் தொடர்ந்து பல சாதனைகள் அரங்கேறிய நிலையில் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா மனதை ஒருமைபடுத்தி கைகள் மற்றும் தலையை அசைக்காமல் ஒரு மணி நேரம் பாட்டில்கள் மீது நின்று கண்களில் கண்ணீர் வழிய இவர் செய்த சாதனையை அங்கு கூடியிருந்த அனைவரும் கைகளை தட்டி ஊக்குவித்தனர்.

தொடர்ந்து சாதனை செய்த மாணவிக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஒரு வருடமாக கிராமிய கலைகளை கற்று வருவதாகவும், ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் எனும் இலட்சியத்தில் தாம் இந்த சாதனையை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க