• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

April 11, 2019 தண்டோரா குழு

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சாய்பாபாகாலணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த பாங்க் ஆப் பாரோடா வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப 41 இலட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாவலர்கள் சுப்பிரமணி மற்றும் திருஞானம் ஆகியோரிடம் உரிமம் இல்லாத இரண்டு துப்பாகிகள் மற்றும் தோட்டாக்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்திற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஆயுதப்படையில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க