• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு

July 26, 2019 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நகர முடியாமல் இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நின்றுருந்த 12 வயது மதிக்கதக்க பெண் யானை இன்று உயிரிழந்தது.

கோவை துடியலூரை அடுத்த வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் இடங்கள் அமைந்துள்ளன.இந்த இடத்தில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை
இரண்டு நாட்களாக ஓரே இடத்தில் நகராமல் சோர்வுடன் நின்று வந்தது. இதை பார்த்த பொது மக்கள் யானை நிற்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பெண்யானையை கண்காணித்து வந்தனர். பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று பெண் யானை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க