• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு

February 27, 2020 தண்டோரா குழு

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நான்கு பேரை சிறைபிடித்து போலிசாரிடம் ஒப்படத்தனர்.

கோவையில் உக்கடம், கோட்டை மேடு பகுதியில் உள்ள வீடுகளில் ஆதார் கார்டுகள் , பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அடையாளங்களை நான்கு பேர் சேகரித்தும், செல்போன் மற்றும் டேப்லெட்டில் பதிவு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகவல் பரவியுள்ளது.

இதனை தொடர்ந்து கோட்டை மேடு சின்னபள்ளி ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட நான்கு பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் மக்கள் தொகை கணகெடுப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு மற்றும் விற்பனை பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு என முண்ணுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனையடுத்து உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடந்து போலீசார் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் (வில்சன் கேர்) என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஊழியர்கள் எந்றும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் விற்பனை பொருட்கள் மக்களிடம் கொண்டு சென்றோம் என்ற ஆதாரத்திற்கா ஆதார் கார்டுகளை வாங்கியதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க