• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ்

March 22, 2020 தண்டோரா குழு

ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை
வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த மாணவி ஸ்பெயின் நாட்டிற்கு உயர்கல்விக்காக சென்றுள்ளார்.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர்.இதையடுத்து, பெங்களூர் வழியாக வந்த கோவை மாணவிக்கு விமான நிலையத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாததால் அவரை வீட்டில் இருந்தபடியே தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் அந்த மாணவி தனது வீட்டில் வழக்கம் போல இருந்துள்ளார்.
பின்னர் நாட்களுக்குப் பிறகு
பிரேசிலில் இருக்கும் இந்த மாணவியின் நண்பருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனது போக்குவரத்து தகவல்களை தெரிவித்ததையடுத்து அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சில காரணங்களால் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

கடந்த 19ம் தேதி அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.பின்னர் அவருடன் எடுத்த நபர்களுக்கு பரிசோதனை முடிவு வந்த நிலையில் இவருக்கு மட்டும் வராதது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இப்படியிருக்க கோவையில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசியதில் கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் போக்குவரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க