• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது

August 2, 2020 தண்டோரா குழு

இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலகத் தலைவன் லசந்தா சந்தனா என்கிற அங்கொட லொக்கா. இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவனை இலங்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அங்கிருந்து தப்பி இந்தியா வந்த அங்கொட லொக்கா, கோவை, சேரன்மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (32) மற்றும் இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த அமானி தான்ஜி(27) ஆகியோருடன் வசித்து வந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 4ஆம் தேதி அங்கொட லொக்கா உடல்நலக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சிவகாமி சுந்தரியும், அமானி தான்ஜியும் அவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிவகாமி சுந்தரி அங்கொட லொக்காவை தனது உறவினர் என்று கூறி பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டையை ஆவணமாக மருத்துவமனையில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவனது உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சிவகாமி சுந்தரியிடம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவான நிலையில், சிவகாமி சுந்தரியும், அமானி தான்ஜியும் அங்கொட லொக்காவின் உடலை சிவகாமி சுந்தரி என் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கை பீளமேடு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன நபர் இலங்கையைச் சேர்ந்த மதுமா சந்தனா வசந்தா பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பதும், இவனுடன் தங்கியிருந்த அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கோவையில் தலைமறைவாக இருந்த அங்கொட லொக்காவுக்கும், அமானி தான்ஜிக்கும், பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து போலி ஆதார் அட்டை எடுக்க, போலி ஆவணங்களை சிவகாமி சுந்தரியும், அவரது நண்பரான திருப்பூரில் வசித்துவரும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் (32) என்பவரும் உதவியது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் புதிய வழக்குப் பதிவு செய்து சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி ஆகியோரை சேரன் மாநகர் பகுதியில் கைது செய்த காவல்துறையினர்,இந்த வழக்கில் தொடர்புடைய தியானேஸ்வரனை ஈரோடு இந்திராநகர் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

மேலும் இலங்கையைச் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான அங்கொடா லொக்கா மற்றும் அமானி தான்ஜியுடன், மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரிக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது,
அங்கொட லொக்காவுக்கும் அமானி தான்ஜிக்கும் என்ன தொடர்பு?உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க