• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு

August 4, 2018 தண்டோரா குழு

கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சேரன்நகர் பகுதியை சேர்ந்த சிதம்பரநாத்,கௌதம், கோகுல்நாத் ஆகியோர் நண்பர்கள் சிலருடன் கிரிகெட் விளையாண்டு விட்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். கார் நீலம்பூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது முன்னாள் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த கல்லூரி மாணவன் கௌதம், சித்ம்பரநாத், கோபிநாத் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வினித், சுபிஜித் தேவ், விக்னேஷ்வர்,மோகித், சூர்யா, சல்மான் பாரிஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.காயம் அடைந்த 7 பேர் கோவை புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதி விரைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க