• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்

September 7, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே ஆம்னி பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.முதல்-அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.
தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன.இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, 6-ம்தேதி நேற்று நள்ளிரவு முதல்நீண்ட தூரம் செல்ல வேண்டிய தொலைதூர அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.

மேலும் படிக்க