• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் தாய்மாமன் கைது

June 25, 2019 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் தாய்மாமன் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று முன் இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜூம் வீட்டின் உள்ளே உறங்கச்சென்றுள்ளனர். உறவினர்களில் சிலர் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.

பின்னர் அதிகாலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து, குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர்.இதற்கிடையில்,அந்தக் குழந்தை அருகிலுள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததும் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் காஞ்சனாவின் பெரியப்பா மகன் ரகுநாத் கொன்றது அம்பலமாகியுள்ளது. அவர் அந்தக் குழந்தையை பாலியல் நோக்கத்துடன் தூக்கி சென்றிருக்கிறார்.அப்போது அந்தக் குழந்தை அழுததால் குழந்தையின் வாயை மூடியுள்ளார். வாயை மூடியதால் அந்தக் குழந்தை மயக்கநிலைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் அருகிலிருந்த கிணற்றில் அந்தக் குழந்தையை வீசியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க