கோவையில் இன்று 579 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,662 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 217 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,078 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,269 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை