• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை

September 13, 2020 தண்டோரா குழு

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிஜு 36,என்பவர் சோடா கடை நடத்தி வருகிறார் இவர் இந்து முன்னணி அமைப்பிலும் இருக்கின்றார்.இன்று மதியம் காந்திபுரம் பகுதியில் உள்ள செந்தில்குமரன் தியேட்டர் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிஜீயை சரமாரியாக வெட்டியுள்ளனர் .பின்னர் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் உயிருக்கு போராடிய பிஜீ யை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்த உடனே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் முக்குலத்தோர் படையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் முன் பகை காரணமாக வெட்டியது தெரியவந்து. இதனையடுத்து ஆறுமுகத்தின் நண்பர்கள் உட்பட 7பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க