• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இந்து இளைஞர் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

January 27, 2022 தண்டோரா குழு

அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாணவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர் மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு இச்சம்பவத்தை கண்டித்தும், மாணவிக்கு நீதி வேண்டும் என பாதாகைகளை ஏந்தியும், கருப்பு கொடி ஏந்தியும் சமூக இடைவெளியை பின்பற்றி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்.இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர் கிருஷ்ணா, மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் கோட்ட செயலாளர் சதிஷ் , கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் சிறப்புரையாற்றினர்.மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க