• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்திய வரைபடம் போல் நின்று காட்சி அளித்த பள்ளி மாணவர்கள்

August 15, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் இந்திய வரைபடம் போல் நின்று காட்சி அளித்ததனர்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.பள்ளி தாளாளர் பத்மினி ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இதில் பள்ளி முதல்வர் ஆண்டனி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவை முன்னிட்டு பள்ளியில் அமைக்கப்பட்ட சிறிய பூங்காவை பள்ளியின் கார்னெட் ஹவுஸ் மாணவர்கள் திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விமானபடை குரூப் கேப்டன் சம்சத் தந்த்கர் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். தொடர்ந்து விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க