• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்தியாவிலேயே மிக உயரமாக 165 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

December 20, 2018 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியாவிலேயே மிக உயரமாக 165 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 165 அடி உயரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழாவை பேராயர் ஜோசப் சுதாகர் துவக்கி வைத்தார். விழாவில் கேரல் எனப்படும் கிறிஸ்துமஸ் கூட்டுப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டலின் பொது மேலாளர் ராமச்சந்திரன்,

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 165 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், இந்தியாவிலேயே மிக உயரமான மரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இதனை 24 மணி நேரத்தில் 24 ஊழியர்களை கொண்டு அமைக்கப்பட்டது.36 அடி அகலத்தில் 165 அடி உயரத்தில் செய்யப்பட்ட இந்த மரத்தில், குடில் ஒன்றும் அமைக்கப்பட்டு 20 வகையான கேக், ரொட்டிகள், குக்கீஸ் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் மான்கள் பூட்டிய பனிச்சாரட் வண்டி, பரிசுப்பொருட்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளாலும், பரிசுகளாலும் அலங்கரிக்கப்பட்ட இதனை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வியந்தனர்.இந்த துவக்க விழாவில் ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சக்தி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க