• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 500 கிலோ கஞ்சா பறிமுதல்

October 23, 2019 தண்டோரா குழு

கோவையில் ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 500 கிலோ கஞ்சாவை என்ஐபி சிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கஞ்சா எனும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாக சில புகார் எழுந்து வந்துள்ளது.இக்கஞ்சாவை ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடத்தி வந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலின் படி உடுமலைப்பேட்டை அருகே கோவை என்ஐபி சிஐடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததின் தகவலின்பேரில் கருப்புசாமி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250கிலோ கஞ்சா மற்றும் ஆம்புலன்சில் கடத்தி வரப்பட்ட 250கிலோ கஞ்சா என500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கருப்புசாமியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க