• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆடுகளை கொன்று வந்த சிறுத்தை சிக்கியது

December 5, 2018 தண்டோரா குழு

கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை கொன்று வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மதுக்கரை வனச்சரக பகுதியொட்டிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக உணவுக்காக ஒற்றை சிறுத்தை ஒன்று ஆடுகளைக் அடித்து கொன்று வந்தது.இதுவரை 8 ஆடுகளைக் அடுத்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை சிறுத்தையைக் பிடிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்கானித்து திட்டமிட்டு மோலப்பாளையம் பகுதி மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தனர்.கடந்த 40 நாட்களாக சிறுத்தை கூண்டுக்குள் சிக்காத நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது.

இதையடுத்து, சிறுத்தையைக் தெங்குமரஹடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுத்தையைக் பிடித்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

மேலும் படிக்க