• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரபி மொழியில் கோசங்கள் எழுப்பி சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

February 22, 2019 தண்டோரா குழு

சூடான் நாட்டின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து சூடான் நாட்டு மாணவர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ள கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த நாடான சூடானின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து
கோவையில் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீர் ஈடுபட்டு வருவதாகவும், எனவே சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக கோரியும் கோசங்கள் எழுப்பினர். சூடான் நாட்டு கொடியுடன் அனைவரும் கூடி நின்று அரபி மொழியில் கோசங்கள் எழுப்பியதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க