June 13, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூரின் வேகமான நகர்ப்புற மற்றும் வணிக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், தனது புதிய வர்த்தக அடையாளமான ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ (SBC) வளாகத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நவ இந்தியா பகுதியில் சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன வணிக வளாகம், கோவையின் வளர்ந்து வரும் வணிக சூழலுக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், எதிர்கால முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கங்களுக்கு ஏற்ற மையமாக இது திகழ்கிறது.
2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், தரமான கட்டுமானம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் காலக்கெடுவுக்கு முன்பாக திட்டங்களை நிறைவேற்றும் திறன் ஆகியவற்றின் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோசப் ஸ்டானி,
“வாக்குறுதிகளை வழங்குவது எளிது. ஆனால் அவற்றைத் துல்லியமாக நிறைவேற்றுவதுதான் சான்பிரிக்ஸின் அடையாளம். திட்டமிடல் முதல் கட்டுமானம் மற்றும் ஒப்படைப்பு வரை அனைத்து பணிகளும் எங்களது அனுபவமிக்க உள்கட்டமைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிகிறது. இதுவரை மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது அதற்கு முன்னதாகவே வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய முதன்மைச் செயல் அதிகாரி சௌமியா ராஜேஷ்,
“தற்போது 5 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான கட்டுமானப் பரப்பளவைக் கொண்ட பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, தொழில்நுட்ப திறன், உலகத் தரம் வாய்ந்த கட்டுமானம் மற்றும் காலத்திற்கேற்ற ஒப்படைப்பு ஆகியவற்றின் மூலம் கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பு மற்றும் வணிக வளர்ச்சியில் சான்பிரிக்ஸ் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டரின் அறிமுகம் எங்கள் நிறுவன வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு மைல்கல்லாக மட்டுமல்லாமல், கோயம்புத்தூரின் வணிக சூழலை மேலும் வலுப்படுத்தும் புதிய மையமாகவும் அமையும்,” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் திட்ட மேலாளர் டேவிட் கிறிஸ்டோபர், நிர்வாக உதவியாளர் வைஷ்ணவி திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர்.
மேலும், நாளை நடைபெறவுள்ள துவக்க விழாவில் சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டரில் இடம் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு சாவிகள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் வளர்ந்து வரும் வணிக வரைபடத்தில் புதிய அடையாளமாக ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ உருவெடுத்திருப்பது, நகரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் என தொழில் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.