• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 9 வயது சிறுவன் அனுப்பிய கடிதம்

August 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காநாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 9 வயது சிறுவன் அனுப்பிய கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் நாசா நிறுவனம் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணபிக்கக் கோரி செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியை அறிந்த அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜாக் என்னும் 9 வயது சிறுவன், அந்த பதவிக்கு விண்ணப்பித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தான்.

அக்கடிதத்தில், “அந்த பதவிக்கு நான் ஏற்றவன் என்று நம்புகிறேன். என் சகோதரி என்னை வேற்று கிராக வாசி என்று அழைப்பாள். நான் பல விண்வெளி திரைப்படங்களை பார்த்துள்ளேன். வீடியோ விளையாட்டுகளை நன்றாக விளையாடுவேன்” என ஜாக் தனது கைப்பட எழுதியிருந்தான்.

இதையடுத்து அந்த கடிதத்தை பார்த்த நாசா நிறுவனத்தின் இயக்குனர் அவனுக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“ஜாக், உன்னுடைய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. நாசாவில் பணிபுரிய வேண்டும் என்னும் உன்னுடைய ஆர்வத்தை அறிந்துகொண்டேன். இப்பணி மற்ற கிரகத்திலிருந்து வரும் ஆபத்திலிருந்து நம்முடைய சூரிய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய முக்கியமான பணி ஆகும். நீ பள்ளியில் நன்றாக படித்து, கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வருங்காலத்தில் நாசாவில் சேர்ந்து உன்னுடைய கனவை நனவாக்கு. உனக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

ஜாக்கின் கடிதத்திற்கு நாசா நிறுவனம் பதிலளித்துள்ளது பலருக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க