• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் யு.பிஎஸ்.சோலார் மற்றும் ஸ்டெப் லைசர் சங்கம் 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

August 28, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் யு.பிஎஸ்.சோலார் மற்றும் ஸ்டெப் லைசர் சங்கம் 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அதில் தலைவராக பி.ஸ்டாலின், உதவி தலைவராக ஜி.முத்துக்குமார், செயலாளராக பாலசுப்பிரமணியன், இணை செயலாளராக பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன், பொருளாளராக சரவண செல்வன் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் கூட்டத்தில் அறக்கட்டளையின் அறங்காவலராக ராஜகோபால், செயலாளராக காஜாமொய்தீன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

கூட்டத்தில் சிறப்பு அமைப்பாளர்களாக வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.சுப்பிரமணியன் விஜய் டி.வி.புகழ் டாக்டர் ஏ.ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகளை சங்க இணை செயலாளர் பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

மேலும் படிக்க