• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடக் மஹிந்திரா வங்கியின் புதிய கிளை துவக்கம்

November 9, 2022 தண்டோரா குழு

கோவை மற்றும் திருப்பூரில் கோடக் மஹிந்திரா வங்கியின் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியின் 11வது கிளை கோவை – அவினாசி ரோட்டில், 572/3, நிவாசன் பிளாசா, காளப்பட்டி, அவினாசி ரோடு, கோயம்புத்தூர் – 641 014 (பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில்) இந்த புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது.புதிய கிளையை கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர். தவமணி டி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

கௌரவ விருந்தினர்களாக கே.எம்.சி.எச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் என் பழனிசாமி, கோவை எஸ்.எம். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான சதிஷ் குமார் நாயர் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் மண்டல வர்த்தக மேலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திருப்பூரில் தனது 3-வது கிளையை திருப்பூர் – 641 604, திருப்பூர் காங்கயம் ரோடு, 195/2CJ1B2, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி எதிரில், துவக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை திருப்பூர், பாப்பீஸ் நிட்வேர் நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டா. எ. சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கிவைத்தார். அப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் கோடக் மஹிந்திரா வங்கியின் மண்டல வர்த்தக மேலாளர் சிவகுமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க